சீனா–ரஷ்யா இரகசிய இராணுவ ஒத்துழைப்பு? ஜெர்மனி அவசர விளக்கம் கோரியது

ரஷ்ய படையினருக்கு சீனா இரகசியமாக இராணுவப் பயிற்சி அளித்ததாக வெளியான தகவல்கள் சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து, சீன தூதரை அவசர பேச்சுவார்த்தைக்கு ஜெர்மனி அழைத்துள்ளது.

Reuters வெளியிட்ட தகவலின்படி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியுடன் கடந்த ஆண்டு சீனாவில் ரஷ்ய வீரர்களுக்கு மறைமுகமாக பயிற்சி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்து, அவை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளது.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், “ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைத் தொடர உதவும் எந்தவொரு ஆதரவும், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும்” என்று எச்சரித்துள்ளது.

இந்த விவகாரம், சீனா–ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

Recommended For You

About the Author: admin