அர்ச்சுனா எம்பியின் பதவி பறிபோகுமா?: அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது மனு!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்மானித்தது.

​புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரததினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

​மனுவின் சாராம்சம்

 

​பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சமயத்தில், அவர் அரச வைத்தியராக சேவையாற்றிக்கொண்டிருந்தார் என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

​அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய, அரச ஊழியர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவது சட்டத்திற்கு முரணானது என்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு அது தகுதியற்றவர் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

 

​எனவே, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கும், அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் என்று தீர்ப்பளிக்குமாறும், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: admin