மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..!
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்திருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஆசிரியர் ஒருவரும், பிள்ளைகளை ஏற்றி சென்ற தாயும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
குடத்தனை கிழக்கு பகுதியிலிருந்து குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தனது இரண்டு பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது மருதங்கேணி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்களது மோட்டார் சைக்கிளும் மணல்காடு சந்தி பகுதியில் ஒன்றை ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந் நிலையில் விபத்திற்கு உள்ளான 5 பேரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர். இதில் இருவரே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல் துறை மேற்கொண்டு வருகின்றது..

