மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் – 2026
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்தும் மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் (01.07.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் இக் கண்காட்சி அமைந்துள்ளது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் திரு. இ. ஜனத்குமார், பிரதம கணக்காளர் திரு. எஸ்.கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், ஊடகவியாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப் பிரிவு,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.


