பாரிஸில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி விபத்து!
பிரான்சின் பாரிஸ் நகரின் 16ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள Porte de Saint-Cloud இறுதி நிறுத்தத்தில்,
ஜூன் 25 வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 189ஆம் இலக்க பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
அந்த நேரத்தில் பேருந்து தனது சேவையை முடித்திருந்ததால், அதில் பயணிகள் எவரும் இருக்கவில்லை.
இறுதி நிறுத்தத்தில் மெதுவாக திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே ஓட்டுநருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாக பேருந்து சேவையை இயக்கும் ATM நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள அதேவேளை, தொழிற்சங்கங்கள் தற்போது பிரான்சில் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் பேருந்துகளில் குளிரூட்டி வசதி இல்லாததே இத்தகைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் எனக் குற்றஞ்சாட்டியுள்ளன.

