ஒப்பந்தத்தை மீறினால் அதிரடி பதிலடி – ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு “அதிர்ச்சிடூட்டும் பதிலடி” (Crushing response) கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி எச்சரித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “ஈரானின் உறுதியான நிலைப்பாடு ஒரு மூலோபாய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தது.

தற்போது, லெபனானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலமும், இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்தையும் முழுமையாகப் பின்பற்றுவதன் மூலமும் வாஷிங்டன் தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்.

ஈரானியர்களுக்கு எதிராகத் தன்னிச்சையான திணிப்புகளைச் செய்யும் காலம் இனி முடிந்துவிட்டது” என்று இப்ராஹிம் அசிசி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin