வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து, அது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக பணிப்புரை விடுத்துள்ளது.

பொதுமக்களினால் வடமாகாண ஆளுநருக்குப் புகார் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் முறையற்ற நிதி நிர்வாகம் காரணமாக பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறித்த பிரதேச சபை நிர்வாகத்தின் மீது பிரதானமாக இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தி இதில் சபைக்குத் தேவையற்ற வகையில், ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மக்கள் பணத்தை வீணடித்தமை மற்றும் CCTV கண்காணிப்பு கேமராக்களை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் மற்றும் பாரிய நிதி விரயம் இடம்பெற்றமை தொடர்பில் முறைகேடு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இப் முறைப்பாட்டு மனுவை ஆராய்ந்த கௌரவ வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஆளுநர் செயலகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது.

இதன்படி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன் மற்றும் உதவிச் செயலாளர் க.ஏகாந்தன் ஆகியோரின் கையொப்பங்களுடன், 2026.05.29 அன்று ஆளுநர் செயலகத்தினால் (கடித இலக்கம்: G/NPC/A4/LG/COM/VA/26/A/15) வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் விபரங்கள் குறித்து உடனடியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் நிதி பயன்பாடு குறித்து ஆளுநர் செயலகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை வவுனியா அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin