செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட அறுவரின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று செவ்வாய்க்கிழமை(16.06.2026) மூன்றாம் கட்டத்தின் 26 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் ஆறு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கமைய, இதுவரையான காலப் பகுதியில் 366 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

