செங்கோல் விடயம். வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வவுனியா மாநகரசபையின் செங்கோல், காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (30.06) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய கண்காணிப்பு கமரா உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிசார், குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை இன்று (01.07) கோரியிருந்தனர்.

இதன்போது, பொலிசாரின் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்திய வவுனியா நீதவான் நீதிமன்றம் வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin