வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் கலந்துரையாடல்!

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வர்த்தக சங்க கட்டிடத்தில் இடம் பெற்றிருந்தது.
பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்த இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக வர்த்தகர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கண்காணிப்பு கேமராக்களை வர்த்தக நிலையங்களில் அமைப்பது நல்லவிடயம் எனவும் தெரிவிக்கப்பட்டதோடு ஏதேனும் சந்தேகத்துக்குரிய நபர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் காணப்படும் பட்சத்தில் அல்லது வர்த்தகர்களிடன் கையளிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் உடனடியாக பொலீசாருக்கு தகவல்களை வழங்கி வர்த்தகர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin