இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் Virat Kohli, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற Kane Williamson குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.
🏏 நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, விராட் கோலி அவருக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார்.
“பல ஆண்டுகளாக எதிரணியில் விளையாடியவராக இருந்து, இன்று நெருங்கிய நண்பராக மாறியிருக்கிறாய். உன்னுடன் போட்டியிட்டதும், உன் பேட்டிங்கைப் பார்த்ததும் பெருமை.
அதைவிட நம் நட்பை நான் அதிகம் மதிக்கிறேன். இனி வரும் வாழ்க்கையில் எல்லா நலன்களும் உனக்குக் கிடைக்கட்டும். உன் கடமையை சிறப்பாக செய்து முடித்துவிட்டாய்.
இப்போது ஓய்வெடுத்து வாழ்க்கையை அனுபவி. நண்பா, வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது!” என்று கோலி பதிவிட்டார்.
கேன் வில்லியம்சன் 16 ஆண்டுகள் நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளார். அவர் நியூசிலாந்தின் அதிக ரன்கள் குவித்த வீரராகவும், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக் கேப்டனாகவும் திகழ்ந்தார்.

