பல்பொருள் அங்காடியில் ‘ஃபிரான்சின்’ (Francine) கோதுமை மாவு வாங்கினீர்களா?

பல்பொருள் அங்காடியில் ‘ஃபிரான்சின்’ (Francine) கோதுமை மாவு வாங்கினீர்களா? பிரான்ஸ் முழுவதும் அவசரமாகத் திரும்பப் பெறப்படுகிறது!

பிரான்ஸ் முழுவதும் நன்கு அறியப்படட ஃபிரான்சின்’ (Francine)என்ற வணிகப் பெயர் கொண்ட இந்த மாவின் சில தொகுப்புகளை இனிப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் எச்சரிக்கை அமைப்பு (Rappel Conso) தெரிவித்துள்ளது. இதில் ‘எர்காட் ஆல்கலாய்டுகள்’ (alcaloïdes de l’ergot) எனப்படும் நச்சுப்பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேக், பாண் பணிஸ் அல்லது பீட்சா மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான அன்றாட மூலப்பொருள் கோதுமை மாவு. எனவே, ‘ஃபிரான்சின்’ (Francine) என்ற வணிகப்பெயர் கொண்ட கோதுமை மாவு திரும்பப் பெறப்படுவது குறித்த இந்த எச்சரிக்கையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

கடந்த ஜூன் 2-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, தேசிய அளவில் இந்த மாவைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை ‘நுகர்வோர் எச்சரிக்கை அமைப்பு’ அமைப்பு அறிவித்துள்ளது. Auchan, Carrefour, Franprix, Leclerc மற்றும் Système U போன்ற முக்கியப் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட இந்த மாவின் இரண்டு குறிப்பிட்ட தொகுப்புகளில் (lots) நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது.

“Ma farine de blé complète” என்ற பெயரில் விற்கப்படும் ஒரு கிலோ அளவிலான முழு கோதுமை மாவுப் பெட்டிகளே திரும்பப் பெறப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட தொகுப்புகள் (Lots): HG10173694 மற்றும் HG10173796

பார்கோடு எண் (Code-barres): 3068111301246

காலாவதித் திக தி (Date limite de consommation): டிசம்பர் 20, 2026

இந்தக் குறிப்பிட்ட மாவு கடந்த 2026 ஆண்டு ஏப்ரல் 09 ம் திக தி முதல் விற்பனையில் இருந்துள்ளது.

“எர்காட் ஆல்கலாய்டுகள் என்பவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களாகும். இவை பொதுவாகக் கம்பு மற்றும் கோதுமைப் பயிர்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் உருவாகின்றன” எனப் பிரெஞ்சு ஆய்வகக் குழுவான ‘யூரோஃபின்ஸ்’ (Eurofins) விளக்குகிறது. இவை குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் மிகவும் ஆபத்தானவை. தற்போது திரும்பப் பெறப்படும் இந்த மாவில், நச்சுக்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுக்கள் அதிக அளவில் உடலுக்குள் சென்றால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான கோளாறுகள் (குமட்டல், வாந்தி), நரம்பியல் அல்லது ரத்தநாளப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, ஜூலை 31, 2026 வெள்ளிக்கிழமை வரை வாடிக்கையாளர்கள் இந்த மாவை திரும்ப ஒப்படைத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெறலாம். இதற்கான வழிமுறைகளை நேரடியாகச் சம்பந்தப்பட்ட கடைகளில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

Recommended For You

About the Author: admin