திட்டமிட்ட சதியா? அரசியல் பின்னணியா?

திட்டமிட்ட சதியா? அரசியல் பின்னணியா? – ஹிட்லரின் மலைவாழ் இல்லத் தீ விபத்து குறித்துத் தீவிர விசாரணை!

ஜேர்மனியின் தெற்கு மாநிலமான பவேரியாவில் அமைந்துள்ள அடால்ப் ஹிட்லரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைவாழ் இல்லமான ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ (Eagle’s Nest / Kehlsteinhaus) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

ஹிட்லர் மற்றும் அவரது முக்கிய நாசிச அதிகாரிகள் ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த மாளிகையில் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 

மலைப்பகுதியின் கடினமான நில அமைப்பு காரணமாகத் தீயணைப்புப் பணிகளில் கடும் சிரமம் ஏற்பட்டது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய ஒருவரைக் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

 

இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் நோக்கங்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரக் குற்றவியல் விசாரணையை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin