நடிகர் அக்ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்ட நபர்!!

நடிகர் அக்ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்ட நபர்!!

சமீப காலமாகவே ஆன்லைன் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தான் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தன்னுடைய மகளுக்கு நேரத்தை மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘2.ஓ ‘ திரைப்படத்தில், முக்கிய வில்லன் ரோலில் நடித்திருந்தார். இவர் அண்மையில் மும்பையில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தனது 13- வயது மகள் எதிர்கொண்ட அனுபவத்தை கூறியுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “தனது மகள் ஆன்லைன் கேம் ஒன்றை விளையாடிக் கொண்டிருந்தபோது, அறிமுகமில்லாத நபருடன் பேச துவங்கினார். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த அந்த உரையாடல், பின்னர் தனிப்பட்ட கேள்விகளாக மாறியது. அந்த நபர் “நீ எங்கே இருக்கிறாய்?”, “நீ ஆணா அல்லது பெண்ணா?” போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். என் மகளும் எதார்த்தமாக தான் ஒரு பெண் எனச் சொன்னவுடன், அந்த நபர் திடீரென மிகவும் கேவலமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது 13 வயதே ஆகும் அந்த குழந்தையிடம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பும்படி கேட்டுள்ளார். இதனால் பயந்து போன அவள் அவளின் அம்மாவிடம் இதை கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து சைபர் கிரைமில் புகாரும் கொடுக்கப்பட்டதாம்.

 

இந்த சம்பவத்தை எடுத்துரைத்த அக்‌ஷய் குமார், இன்றைய டிஜிட்டல் காலத்தில் குழந்தைகளுக்கு சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் சைபர் குற்றங்கள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்த வேண்டுகோளை அவர் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பாட்னவிஸ் அவர்களிடம் நேரடியாக தெரிவித்தார்.

 

 

மேலும் இதுபோன்ற அறியாத வயதில் உள்ள குழந்தைகள் இணையத்தை அதிகம் பயன்படுத்தும் போது , அவர்களை மிகவும் எளிதில் மோசடி வலையில் சிக்க வைக்க வாய்ப்பு இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த குற்றச்சாட்டு வெளிவந்ததைத் தொடர்ந்து, மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

அந்த நபர் இதுபோன்ற தவறான அணுகுமுறையோடு வேறு பெண்களிடமும் பேசியுள்ளாரா? என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தனிப்பட்ட ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட முடியாது. சமீப காலங்களில் ஆன்லைன் வழியாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. “டிஜிட்டல் கைது” எனப்படும் போலி சட்ட நடவடிக்கைகள், பங்கு வர்த்தக மோசடிகள், போலியான முதலீட்டு திட்டங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் நடக்கும் ஏமாற்றுகள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகள் இது போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க, அவர்களின் ஆன்லைனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பெற்றோர்களும் குழந்தைகளுடன் திறந்த உரையாடலை மேற்கொள்வதை கடைபிடிக்க வேண்டும் என குழந்தை ஆலோசகர்கள் கூறுகிறார்கள்

Recommended For You

About the Author: admin