கார்ல சின்ன குழந்தைங்க இருக்காங்க!!

கார்ல சின்ன குழந்தைங்க இருக்காங்க!!

பிளீஸ் எங்களை விட்டுருங்க.

MP மாநிலம் இந்தூரில், ஒரு சிறிய கார் விபத்தைத் தொடர்ந்து நடந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட பிறகு, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் கடும் ஆத்திரமடைந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இருந்த காரை வழிமறித்து அதன் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதாக மிரட்டியுள்ளார்.

இதனால் காரின் உள்ளே இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

காரின் உள்ளே இருந்த குடும்பத்தினர், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கதவுகளைப் பூட்டிக் கொண்டு, அந்த நபரிடம் கண்ணீர் மல்கக் கெஞ்சியுள்ளனர்.

“காரில் சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள், தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள்” என்று அவர்கள் கதறியும், அந்த நபர் ஆவேசமாக காரின் கண்ணாடியைத் தட்டி மிரட்டல் விடுத்தார்.

காரில் இருந்த பெண் ஒருவர் இந்த முழு சம்பவத்தையும் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த நபரின் முரட்டுத்தனமான செயலுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிறிய விபத்திற்காக, குழந்தைகள் மற்றும் பெண்கள் இருக்கும் கார் என்று கூடப் பாராமல் இவ்வளவு வன்முறையாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin