மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம்

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம்

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: admin