மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரைக் காணவில்லை:
மன்னார், முருங்கன் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப்பெற்றான்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக இன்று (2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை) முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கைப்பெற்றான்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றெமி (வயது 48), (அழைக்கப்படும் பெயர்: சிறில்) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று (2026 ஏப்ரல் 15, புதன்கிழமை) காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என இவரது சகோதரியினால் இன்று முருங்கன் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் எங்கு சென்றார் அல்லது என்ன காரணத்திற்காக காணாமல் போனார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
குறித்த நபர் தொடர்பான ஏதேனும் விபரங்கள் தெரிந்தால், உடனடியாகக் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்பு இலக்கம்: 0770699042
காவல் நிலையம்: முருங்கன் காவல் நிலையம்

