நிஜமாகும் பேரழிவு? வெறும் 60 நாட்களில் 8 கி.மீ. பனிப்பாறை காணாமல் போனது!

நிஜமாகும் பேரழிவு? வெறும் 60 நாட்களில் 8 கி.மீ. பனிப்பாறை காணாமல் போனது! அண்டார்டிகாவில் நிகழ்ந்த மின்னல் வேக சரிவு!

பருவநிலை மாற்றத்தின் கோர முகம் அண்டார்டிகாவில் புதிய அதிரடியைக் காட்டியுள்ளது. அண்டார்டிகாவின் ‘ஹெக்டோரியா’ (Hektoria Glacier) பனிப்பாறை, இதுவரை அறிவியலாளர்கள் பார்த்திராத வேகத்தில் உருகி சரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

வெறும் 60 நாட்களில் இந்த பனிப்பாறை 8 கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்வாங்கியுள்ளது.

 

நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘மன்ஹாட்டன்’ தீவு அளவிற்கு (சுமார் 60 கி.மீ) இருந்த பிரம்மாண்ட பனிப்பகுதி உடைந்து சிதறி கடலில் கலந்துள்ளது.

 

இதனை பார்த்த விஞ்ஞானிகள் “கற்பனைக்கும் எட்டாத வேகம்” என மலைத்துப் போயுள்ளனர்.

 

வழக்கமாக பனிப்பாறைகள் கரடுமுரடான தரைப்பகுதியில் இருப்பதால் மெதுவாகவே நகரும். ஆனால், ஹெக்டோரியா பனிப்பாறை ‘ஐஸ் பிளைன்’ (Ice plain) எனப்படும் மிகவும் சமமான தரைப்பரப்பின் மேல் அமைந்திருந்தது.

 

பனிப்பாறையின் தடிமன் மெலிந்தவுடன், அந்த சமமான தரையில் இருந்த பிடிமானம் (Friction) தளர்ந்தது.

 

தரைக்கும் பனிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டவுடன், வெப்பமான கடல்நீர் அடியில் புகுந்து பனிப்பாறையை அப்படியே மேலே தூக்கியது. இதனால் ‘செயின் ரியாக்ஷன்’ ஏற்பட்டு, பனிப்பாறை சீட்டுக்கட்டு போலச் சரிந்து கடலில் கலக்கத் தொடங்கியது.

 

இந்தத் திடீர் சரிவு இன்று நேற்று தொடங்கியதல்ல. 2002-ல் ‘லார்சன் பி’ என்ற பனி அடுக்கு உடைந்தபோதே இதற்கான அடித்தளம் போடப்பட்டு விட்டது. கடந்த 20 ஆண்டுகளாகப் பாதுகாப்பாக இருந்த அந்த அடுக்குகள் இல்லாததால்,

 

ஹெக்டோரியா பனிப்பாறை மெல்ல மெல்லத் தன் வலிமையை இழந்து வந்தது. 2022 முதல் 2026 வரையிலான ஆய்வில் இது மொத்தம் 25 கி.மீ தூரம் பின்வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹெக்டோரியா பனிப்பாறை அளவில் சிறியதுதான் என்றாலும்,

 

இது உலகையே அச்சுறுத்தும் ‘தவைட்ஸ்’ (Thwaites Glacier) போன்ற ‘டூம்ஸ்டே’ (Doomsday) பனிப்பாறைகளுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin