இது எங்கள் போர் அல்ல!: ட்ரம்பிற்கு ஐரோப்பா விடுத்த மரண அடி
ஈரானுக்கு எதிரான போரில் இணையுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் நிராகரித்துள்ளன.
இது குறித்து ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), இந்தப் போரின் நோக்கம் மற்றும் முடிவுகள் குறித்துத் தங்களுக்குத் தெளிவில்லை எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் திட்டங்களில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க இராணுவ உதவி வழங்குமாறு அமெரிக்கா கேட்டிருந்தது. இருப்பினும், “போர் நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணையில் இராணுவப் பங்கேற்பு இல்லை” என ஜேர்மனி அதிரடியாக அறிவித்துள்ளது.
“இது எங்கள் போர் அல்ல; இதை நாங்கள் தொடங்கவில்லை” என ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜேர்மனியைத் தொடர்ந்து, இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான பிரான்ஸும் இந்தப் போரில் ஒரு தரப்பாக இணையப்போவதில்லை என அறிவித்துள்ளது.

