ஈரானின் இராணுவ பலம் சிதைந்துவிட்டது : அமெரிக்க உளவுத்துறை பணிப்பாளர் துளசி கப்பார்ட் தெரிவிப்பு
அமெரிக்க காங்கிரஸ் குழுவில் சாட்சியமளித்த தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களால் ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் பெருமளவில் சிதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் பாதுகாப்புத் திறன்கள் பாரியளவில் பலவீனமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னைய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீண்டு, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.
எனினும், ஈரான் அமெரிக்காவிற்கு “உடனடி அச்சுறுத்தலா?” என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த துளசி கப்பார்ட், அதனைத் தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

