இரட்டைக் கொலை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது

இரட்டைக் கொலை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது

களுத்துறை, நாகொடவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பு அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி நடந்த இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினரால் நேற்று இரவு (15) குறித்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

24, 26 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள், களுத்துறை தெற்கு மற்றும் அகலவத்தையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், இரண்டு அலைபேசிகள், ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கரவண்டி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin