யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தின் மண்கும்பான் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர், வாடகை கார் ஒன்றில் மண்கும்பான் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவர்கள் பயணித்த கார், எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவரும், கார் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் என மொத்தம் ஐவரும் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை மற்றும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஊர்காவற்துறைப் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Recommended For You

About the Author: admin