ஈழத் தமிழர் வெறுக்கும் நடிகராக மாறும் விஜய்!!

ஈழத் தமிழர் வெறுக்கும் நடிகராக மாறும் விஜய்!!

என்னது..! விஜய் எனக்கு வீடு போன்றவர். சங்கீதா வீட்டில் இருக்க விடாமல் விரட்டுவதாக மனு தாக்கல் செய்த நிலையில் திரிஷா பேசிய வீடியோ வைரல்..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் மற்றும் நடிகை த்ரிஷாவுடனான நட்பு குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

 

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் நிலவுவதாகவும், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. இதற்கிடையே, பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரமின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாகப் பங்கேற்றது இந்த விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.

 

சென்னையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் தங்க நிறத்திலான உடைகளை அணிந்து ஒன்றாக வந்தனர். மணமக்களை வாழ்த்திவிட்டு இருவரும் ஒன்றாகவே அரங்கிலிருந்து வெளியேறினர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா சுமத்தியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

 

இந்தச் சூழலில், நடிகை த்ரிஷா ஒரு பழைய நேர்காணலில் பேசிய வீடியோ மீண்டும் பரவி வருகிறது. அதில், “வீடு என்பது ஒரு இடம் அல்ல, அது ஒரு நபர். எனக்கு விஜய் தான் அந்த நபர். அவரிடம் தான் நான் அமைதி, அன்பு மற்றும் மரியாதையைக் காண்கிறேன்” என்று த்ரிஷா பேசியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

 

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இது போன்ற சர்ச்சைகள் குறித்துப் பேசிய விஜய், “சமீபகாலமாக என் மீது பல்வேறு புகார்களும் சர்ச்சைகளும் கிளப்பப்படுகின்றன. இதனால் எனது ரசிகர்கள் வருத்தமடைவதை நான் அறிவேன். உங்கள் வருத்தம் எனக்கும் கவலையளிக்கிறது. ஆனால், இது போன்ற வீணான விவாதங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் மக்கள் நலப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; இந்த வதந்திகளால் உங்களைத் துன்புறுத்திக் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். மேலும் விஜயின் மனைவி சங்கீதா தன்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருக்க விடாமல் விஜய் விரட்டுவதாக மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் திரிஷா இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended For You

About the Author: admin