டிரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் இருளில் மூழ்கும் உலக நாடுகள்..!
3-ம் உலகப் போர் வெடிப்பது உறுதி. அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா. பெரும் பரபரப்பு..!!!
Middle East – நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக மூன்றாம் உலகப் போர் தொடங்குவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும், அந்நாட்டின் மூத்த அதிகாரியுமான டிமிட்ரி மெட்வெடேவ் அரசு செய்தி நிறுவனமான ‘டாஸ்’ (Tass)-க்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறுகையில்:
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிற நாடுகளின் அரசியல் அமைப்புகளைக் கிரிமினல் முறையில் மாற்ற நினைக்கும் தனது பைத்தியக்காரத்தனமான போக்கைத் தொடர்ந்தால், மூன்றாம் உலகப் போர் ஏற்படுவது உறுதி. எவ்வித தடையுமின்றி அமெரிக்கா மேற்கொள்ளும் இத்தகைய தூண்டுதல்கள் உலகையே பேரழிவிற்கு இட்டுச் செல்லும்.
உலகளாவிய தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இந்தப் போரைத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் ஆட்சி முறையை மாற்ற நினைக்கும் டிரம்பின் முடிவு ஒரு மிகப்பெரிய தவறு என்றும், இதன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் உயிரையும் அவர் ஆபத்தில் தள்ளியுள்ளார் என்றும் மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.
ஈரான் இதுவரை அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மிகப் பெரிய அளவில் பதிலடி கொடுக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மெட்வெடேவ், “ஈரானியர்களுக்கு எப்படிப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று தெரியும். அவர்களின் கலாச்சாரம் மிகவும் பழமையானது. ஈரான் உரிய நேரத்திற்காகக் காத்திருக்கிறது; அவர்கள் அமைதியாக இருப்பதைக் பலவீனம் எனக் கருதிவிடக் கூடாது” என்றார்.
மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் உச்சபட்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

