சுற்றி வளைக்கப்படுகிறதா ஈரான்?” -நான்கு முஸ்லிம் நாடுகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பல்ல

சுற்றி வளைக்கப்படுகிறதா ஈரான்?” -நான்கு முஸ்லிம் நாடுகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பல்ல என மறுப்பு – ஈரான் இல்லையென்றால், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பவர் யார்? அந்த நாடுகள்… மர்மமாக மாறும் போர்..!!

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது அஜர்பைஜான், ஓமன், துருக்கி மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு நாடுகளில் மர்மமான முறையில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் பதிவாகி உலகையே அதிரவைத்துள்ளன.அஜர்பைஜானின் விமான நிலையம் அருகே விழுந்த ட்ரோன்கள் மற்றும் துருக்கியை நோக்கி வந்த பாலிஸ்டிக் ஏவுகணையை நேட்டோ (NATO) பாதுகாப்பு அமைப்பு இடைமறித்தது என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாகச் சில நாடுகள் குற்றம் சாட்டினாலும், தெஹ்ரான் நிர்வாகம் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாறாக, தன் மீது பழி சுமத்தி விரோதத்தைத் தூண்டுவதற்காகச் சில நாடுகள் திட்டமிட்டு நடத்தும் “தவறான கொடி” (False Flag) நடவடிக்கைகள் இவை என ஈரான் பகிரங்கமாகச் சாடியுள்ளது.

இந்த மர்மத் தாக்குதல்கள் குறித்து அந்தந்த நாடுகள் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் விமானப்படை தளம் அருகே விழுந்த ட்ரோன், ஈரான் தயாரிப்பான ‘ஷாஹெட்’ மாடல் போல இருந்தாலும் அது ஈரானிலிருந்து ஏவப்படவில்லை என இங்கிலாந்தே ஒப்புக்கொண்டுள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் மற்றும் அஜர்பைஜான் எல்லைகளிலும் இதே போன்ற மர்ம ட்ரோன்கள் கண்டறியப்பட்டிருப்பது, போர்க்களம் முக்கிய மையங்களில் இருந்து விலகி மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதைக் காட்டுகிறது. சிறிய பாதுகாப்புச் சிக்கல்கள் கூட பெரிய இராஜதந்திர நெருக்கடியாக மாறக்கூடிய இக்கட்டான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதைக் கண்டறியும் பணியில் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன.

Recommended For You

About the Author: admin