அலி கமேனி மறைவு: “வாழும் நாட்டை நேசியுங்கள்” இந்தியர்களுக்கு அமெரிக்க ராணுவ வீராங்கனை ஷில்பா சௌத்ரி உருக்கமான வேண்டுகோள்.!!
America ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி வீராங்கனை ஷில்பா சௌத்ரி, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து நிலவும் பதற்றமான சூழலில், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமேனியின் மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், சர்வதேச விவகாரங்கள் மிகவும் சிக்கலானவை என்றும், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு அமைதியான முறையில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீங்கள் வசிக்கும் நாட்டை நேசியுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள ஷில்பா, தற்போதைய சூழலில் தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார். போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் தீர்வாகாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்துத் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அலி கமேனியின் மரணத்தை ஒட்டி ஸ்ரீநகர், லக்னோ மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், ஒரு ராணுவ வீராங்கனையாக ஷில்பா சௌத்ரி விடுத்துள்ள இந்த ஒற்றுமைச் செய்தி இணையத்தில் பரவலாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அமைதி மற்றும் தேசப்பற்றை முன்னிறுத்தி அவர் வெளியிட்டுள்ள இந்த ஆலோசனைகள், குறிப்பாகப் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வழிகாட்டுதலாகப் பார்க்கப்படுகிறது.

