ஈரான் கப்பல் தாக்குதல் – அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள்

ஈரான் கப்பல் தாக்குதல் – அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள்

ஈரான் கப்பல் தாக்குதல் – அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள்
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் இன்று (06) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், ஈரானுக்கு எதிரான அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் “நேரடியாகப் பங்கெடுக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை” என்று அவர் ஸ்கை நியூஸ் தளத்திற்குத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, சுமார் 50-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளில் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin