இலங்கை தேசிய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜேமி சிடன்ஸ் நியமனம்
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேமி சிடன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
அவர் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

