அஜர்பைஜான் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம். ஈரான் தூதுவரை விளக்கம் கேட்க அழைப்பு.
அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அஜர்பைஜானின் Nakhchivan விமான நிலையத்தைத் தாக்கியுள்ளது, இரண்டாவது ட்ரோன் Shekerabad பகுதியில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தின் அருகே விழுந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் மூலம், “ஈரான் அஜர்பைஜான் பிரதேசத்திற்கு எதிராக எதிராக ஒரு பயங்கரவாதச் செயலைச் செய்துள்ளது” என்று ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார்.
“ஈரானிய அதிகாரிகள் அஜர்பைஜான் தரப்பிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இந்த பயங்கரவாத செயலைச் செய்தவர்கள் குற்றவியல் ரீதியாக பொறுப்பேற்க வேண்டும்” என்று பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அலியேவ் கூறினார் .
இதேவேளை இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் , ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் மோதலுடன் தொடர்புடைய பிராந்தியத்தில் பதட்டங்களை மட்டுமே அதிகரிக்கும் என்றும், இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க அஜர்பைஜானுக்கான ஈரானின் தூதர் தலைநகர் பாகுவில் உள்ள அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியது.
———————-
📌அஜர்பைஜான் இஸ்ரேலுக்கு முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாகும், அதே நேரத்தில் இஸ்ரேல் பல ஆண்டுகளாக அஜர்பைஜானின் தலைநகர் பாகுவின் முக்கிய பாதுகாப்பு பங்காளியாக இருந்து வருகிறது.
எனினும் தற்போது, அஜர்பைஜானைத் தாக்க ஈரான் எந்த காரணமும் இல்லை, ஏனெனில் அஜர்பைஜானோ அல்லது துருக்கியோ போரில் பங்கேற்கவில்லை,” என்று ஐரோப்பாவை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன ஆய்வாளர் ரவூப் மிர்காடிரோவ் Radio Free Europe/Radio Liberty ஊடகத்திடம் கூறினார்.
“நக்சிவன் விமான நிலையத்தின் மீதான இந்த ட்ரோன் தாக்குதல் ஒரு விபத்து அல்லது இப்பகுதியில் பெரிய அளவிலான மோதல்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்” என்று அவர் கூறினார்.
இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் இருந்தபோதிலும், அண்டை நாடான ஈரானுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த மாநிலத்திற்கு எதிராகவோ இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க எந்தவொரு நாடும் தனது பிரதேசத்தையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்காது என்று அஜர்பைஜான் அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர்.
“ஈரானில் மில்லியன் கணக்கான அஜர்பைஜானியர்கள் வசிக்கின்றனர், தெஹ்ரான் அவர்களைத் தூண்டிவிட விரும்பாது. என தெரிவிக்கப்படுகிறது.


