“இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல”

“இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல” லிப்ட்டில் இருந்து இறங்கும் போது நேர்ந்த பயங்கரம்.. மயிரிழையில் உயிர் தப்பிய நபர். பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Gujarat -மாநிலம் வல்சாத் நகரில் உள்ள சர்தார் ஹைட்ஸ் குடியிருப்பு வளாகத்தின் சபர்மதி கட்டிடத்தில் அதிர்ச்சியூட்டும் லிப்ட் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

கட்டிடத்தில் வசிக்கும் வத்சல்பாய் பஞ்சால் என்பவர் லிப்ட்டில் இருந்து வெளியேற முயன்றபோது, லிப்ட் கதவுகள் மூடுவதற்கு முன்பே திடீரென இயங்கத் தொடங்கியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் கொடூர விபத்தில் வத்சல்பாய்க்கு உட்புறக் காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் உயிர் தப்பியது ஒரு அதிசயம் என்றே கூறப்படுகிறது. விபத்து நடந்த உடனேயே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பராமரிப்புப் பணிகள் குறித்துக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பழைய கட்டிடங்களில் உள்ள மின் தூக்கிகளின் (Lifts) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin