“ஸ்டாலினுக்கு தூக்கமே வரல!” தேர்தல் பயத்தில் முதல்வர் எடுக்கும் அந்த அதிரடி முடிவு.. 2G ஊழலை இழுத்து திமுகவை கதறவிட்ட செல்லூர் ராஜு.. மேடையை அதிரவைத்த பேச்சு..!!
Madurai – செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் தூக்கமின்றி தவிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவினர் பொதுமக்களுக்குப் பணப்பலன்களை அள்ளி வீசுவதாகவும், வெற்றுப் பேப்பர்களைப் பட்டாவாக வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தேர்தலுக்காகப் புதிய திட்டங்களை அறிவித்து, கூட்டணி கட்சித் தலைவர்களை முதல்வர் அவசரமாகச் சந்தித்து வருவது அவரது பயத்தையே காட்டுகிறது என்றும், திமுக ஒரு “தில்லுமுல்லு கட்சி” என்றும் அவர் சாடினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுகவே அதன் “பாஸ்” என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைப் “பச்சோந்தி” என்று விமர்சித்த அவர், ஓ.பி.எஸ்-ன் அரசியல் எதிர்காலம் முடிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
2G ஊழல் காலத்திலேயே காங்கிரஸை கலைஞர் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய செல்லூர் ராஜு, தற்போது திமுகதான் காங்கிரஸின் அடிமை கட்சியாகச் செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்

