“நாளைய வானிலை: பனிச் சறுக்கல் எச்சரிக்கை!”

“நாளைய வானிலை: பனிச் சறுக்கல் எச்சரிக்கை!” – பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை(Vigilance jaune)!

நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை,பெப்ரவரி 15) பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் அலை (Vague de froid) வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, Météo-France நிறுவனம் நாட்டின் பல மாவட்டங்களுக்கு Neige-verglas (பனி மற்றும் வழுக்கும் சாலை) தொடர்பான மஞ்சள் எச்சரிக்கையை (Vigilance jaune) விடுத்துள்ளது.

 

Ain, Rhône, Isère, Savoie, Normandie மற்றும் பாரிஸ் Île-de-France உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகள் இந்தப் பட்டியலில் உள்ளன.

 

வடமேற்கிலிருந்து வரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, காலை வேளையில் சமவெளிப் பகுதிகளிலேயே பனிப்பொழிவு (Chutes de neige) இருக்கும். குறிப்பாக Région parisienne மற்றும் Centre பகுதிகளில் தரையில் பனி படரவும் வாய்ப்புள்ளது.

 

மதியத்திற்குப் பிறகு பனிப்பொழிவு கிழக்கு (Est) மற்றும் Auvergne நோக்கிக் நகரும். அப்போது Pluie verglaçante (உறைபனி மழை) பெய்யக்கூடும் என்பதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

அதன் பிறகு, மாலையில் வெப்பநிலை சற்று உயர்ந்து , பனி மழையாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. Alpes மலைத்தொடரில் மாலையில்தான் பனிப்பொழிவு தொடங்கும்.

Recommended For You

About the Author: admin