பிரான்ஸில் மீண்டும் சுட்டெரிக்கும் வெப்ப அலை – 61 மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

பிரான்ஸில் மீண்டும் சுட்டெரிக்கும் வெப்ப அலை – 61 மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம் பிரான்ஸ் நாட்டிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

வறட்சி மற்றும் காட்டுத்தீ அச்சங்களுக்கு மத்தியில், கடுமையான கதிர் வெம்மையலை நாட்டைப் புரட்டிப் போட்டுள்ளது. மக்கள் கடும் வெப்பத்தால் தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலைத் தீவிரமாகக் கருத்தில் கொண்ட Météo-France வானிலை ஆய்வு மையம், இன்று செவ்வாய்க்கிழமை நாட்டின் 61 மாகாணங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மிக ஆபத்தான நிலையைக் குறிக்கிறது.

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட Île-de-France பிராந்தியம் முழுவதும் இன்று நண்பகல் முதல் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளது. மேலும், Bourgogne, Centre-Val-du-Loire மற்றும் Pays-du-la-Loire ஆகிய முக்கியப் பிராந்தியங்களும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஃபினிஸ்தேர், மொர்பியான், இல்-ஏ-விலைன் போன்ற மாவட்டங்களும், ஓட்-கரோன், இசேர், சவோய் மற்றும் ரோன் உள்ளிட்ட இடங்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன. வெப்பத்தின் தாக்கம் அங்கு கடுமையாக உணரப்படுகிறது.

இந்த வெப்பத் துயரிலிருந்து தற்போது ஓரளவு தப்பித்திருப்பவை வடக்கே உள்ள Île-de-France, ஆங்கிலக் கால்வாய் கடலோரப் பகுதிகள் மற்றும் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதிகள் மட்டுமே. அங்கு வெப்பநிலை 35 பாகைக்கும் கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த வெப்ப அலை இன்று மேலும் தீவிரமடைந்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், கூடுதல் மாகாணங்களுக்குச் செம்மஞ்சள் எச்சரிக்கை விஸ்தரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக Météo-France தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin