அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
“ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர்.
மக்களோ, ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.” எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது.
அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாது என்பதே அது.
எனவே, அமெரிக்கா ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டும்” எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.