ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து!

ஈரானின் லொரெஸ்தான் மாகாணம், புல்தோக்தர் பகுதியில் அமைந்துள்ள சிறிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் இன்று (10) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நிறுவனத்தின் துணைத் தொட்டிகள் தீப்பற்றியுள்ள நிலையில், தீ வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதான எண்ணெய் தொட்டி இதுவரை பாதுகாப்பாக இருப்பதாகவும், தீ அப்பகுதிக்கு பரவாமல் தடுப்பதே மீட்புக் குழுக்களின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin