“தொழிற்பயிற்சி தேடும் மாணவர்களே…” – அரசு இணையதளம் தயார்!

“தொழிற்பயிற்சி தேடும் மாணவர்களே…” – அரசு இணையதளம் தயார்!

உங்கள் வீட்டில் Collège (4e, 3e) அல்லது Lycée (2nde) படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கான Stage (தொழிற்பயிற்சி) தேடலை எளிதாக்க அரசு 1élève1stage என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாணவர்கள் வருங்காலத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை முடிவு செய்யவும் (Orientation), பல்வேறு தொழில்கள் (Métiers) குறித்து நேரில் கண்டு தெரிந்துகொள்ளவும் இந்தப் பயிற்சி உதவும்.

மாணவர்கள் தனியார் நிறுவனங்கள் (Entreprises), அரசு அலுவலகங்கள் (Administrations), சங்கங்கள் (Associations) அல்லது உள்ளாட்சி அமைப்புகள் (Collectivités territoriales) என எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் சேரலாம்.

இணையதளத்தில் என்ன வசதிகள்?

மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதி (Zone géographique) மற்றும் விரும்பும் துறைக்கு ஏற்பப் பயிற்சி இடங்களைத் தேடலாம்.

ÉduConnect கணக்கு வழியாக மாணவர்கள் நேரடியாக நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர்வதற்கு முன் பள்ளியும் நிறுவனமும் கையெழுத்திட வேண்டிய Convention de stage (ஒப்பந்தப் படிவம்) இதிலேயே கிடைக்கும்.

முக்கிய அறிவிப்பு (Seconde மாணவர்களுக்கு)

Seconde வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி கட்டாயமானது (Obligatoire).

காலம்: வரும் ஜூன் 15 முதல் ஜூன் 26 வரை.

மாணவர்கள் விரும்பினால் இரண்டு வெவ்வேறு இடங்களில் (Lieux d’accueil) பயிற்சியை மேற்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிநாடுகளில் செய்யவும் அனுமதி உண்டு.

பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இந்த இணையதளம் மூலம் உதவலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin