அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு!

அமெரிக்காவில் கிரெடிட் கார்டு வட்டி விகிதத்திற்கு அதிரடி கட்டுப்பாடு!

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 10) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இனி கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் (Credit Card Interest Rates) ஆண்டுக்கு 10% என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றம் வரும் ஜனவரி 20 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதனை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் சராசரி கிரெடிட் கார்ட் வட்டி விகிதங்கள் 20% முதல் 30% வரை மிக அதிகமாக உள்ளன. இந்த 10% உச்சவரம்பு சாதாரண மக்களின் கடன் சுமையை பாதியாகக் குறைக்கும்.

இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும் என்றாலும், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் லாபத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதந்தோறும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை (Balance) வைத்திருப்பவர்கள், இனி மிகக் குறைந்த வட்டியையே செலுத்த வேண்டியிருக்கும். இது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 20-ஆம் திகதி டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கைகளின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த அதிரடி மாற்றம் குறித்த உங்கள் கருத்து என்ன? கீழே கமெண்ட் செய்யுங்கள்!

Recommended For You

About the Author: admin