நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் (Namal Rajapaksa) சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு சங்க அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜக்ஷவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுத்துறையை தன்னிச்சையாக கட்டுப்படுத்த அமைச்சு தயாராகி வருவதாகவும் சரியான திட்டமிடல் மற்றும் எதிர்கால பார்வை இன்றி இலங்கையில் விளையாட்டுகள் தற்போது வழிதவறி வருவதாகவும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் நாமலிடம் தெரிவித்துள்ளனர்.
சரியான திட்டம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்பாடுகளினால் விளையாட்டுத்துறையின் எதிர்காலம் பாரிய ஆபத்தில் உள்ளதாக நாமல் ராஜபக்ஷவிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமலிடம் அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.