மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்-நீதவான் கருப்பையா ஜீவராணி!

மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்-வழக்குகளை மிக விரைவாக முடித்துக் கொடுப்பதற்கு மும்முறமாக பொலிஸார் செயல்பட வேண்டும் என திருகோணமலை நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மொரவெவ சுற்றுலா திறந்த நீதிமன்றத்தில் இன்று (27) குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

வழக்காளிகள் மிகவும் கஷ்டப்பட்டு உரிய நேரத்திற்கு வழக்குகளுக்காக வருகின்ற போது வழக்காளிகளை அலட்சியப்படுத்தாமல் வழக்குகளுக்குரிய உரிய ஆவணங்களை விரைவாக மன்றிற்கு சமர்ப்பித்து வழக்காழிகளின் வழக்குகளை மிக விரைவாக முடிவுறுத்திக் கொடுப்பதற்கு பொலிஸார் செயற்பட வேண்டுமெனவும், வழக்குகளில் சாட்சியாளராக காணப்படுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய வழக்கு தினத்தன்று சமூகம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சாட்சியாளராக காணப்படும் பொலிஸார் வழக்கு தினத்தன்று வராவிட்டால் வழக்கிற்கு வருகின்ற அப்பாவி மக்கள் தமது கூலித் தொழில்களை விட்டுவிட்டு வருவதினால் இன்னும் நஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் பொலிஸார் சிவில் மக்கள் தொடர்பில் கரிசினை காட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin