முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகு – உணவுகள், உலருணவுகளை வழங்கிய முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 35 சிறுவர்கள் உள்ளடங்கலாக 102 பேருடன் மியன்மார் நாட்டுப்படகொன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோர் இவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் அறியத்தந்துள்ளனர்.
இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.