யாழ். போதனா வைத்தியசாலையில் முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
நாவற்குழி கிழக்கு, கைதடியைச் சேர்ந்த கந்தையா ஆனந்தராசா (வயது 65) என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி வி.அன்ரலா மேற்கொண்டார்.
மாரடைப்புக் காரணமாகவே அவர் மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin