டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதற்கமைய டிசம்பர் 03ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரடகனம் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்படவுள்ளது.
டிசம்பர் 5ஆம் திகதியும் குறித்த பிரேரணை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin