புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த முன்னணி ரவி கருணாநாயக்கவால் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.