2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
இன்று சனிக்கிழமை (16.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளதுடன் அந்த கட்சிக்கு தேசியப் பட்டியலிலிருந்து ஒரு ஆசனம் கிடைக்ககப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.