ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் “அங்கஜனின் தந்தையின் பெயரிலும் ஒரு மதுபானசாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்றும் இதன் ஊடாக தனது பெயருக்கும், தனது மகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சதாசிவம் இராமநாதன் சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடத்த தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீடு கேட்டு, தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் இராமநாதன் தெரிவித்துள்ளார்.