நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில் இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், தென் மற்றும் வடமேல் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் வட மாகாணத்திலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்