யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் இன்றைய தினம் யாழ். மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர்.
இதன்போது, தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி போட்டியிடுவதனை தான் வரவேற்பதாகவும், இதுவரை இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஆண்களையே முதன்மைப்படுத்தி வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதும் பெண் போராளிகள் அரசியலில் ஈடுபடுத்துவதனையும் வரவேற்பதாகவும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இவர்களுடன் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரனும் இந்தச் சந்திபில் கலந்து கொண்டார்.