தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) குறைவடைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 200,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 191,500 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (07) தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 208,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 192,500 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,641.74 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin