தங்கத்தின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (30) வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு, செட்டியார் தெருவின் விலை
நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,10,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,94,000 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,13,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,96,750 ரூபாவாகவும் காணப்பட்டிருந்து.
இதேவேளை, சர்வதேச சந்தையில் நேற்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,657.33 அமெரிக்க டொலர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.