ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாயநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் விஜேபண்டாரவுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான விஜேபண்டார, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலைப் பட்டத்தையும் (ஹானர்ஸ்) பட்டத்தையும், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தின் முன்னாள் விரிவுரையாளர் ஆவார்